பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தனது அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அவரது 66ஆவது படமான இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். கார்த்தி, நாகர்ஜுனா நடித்த ‘தோழா’வை இயக்கிய அவர், அதைப்போலவே செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய்யின் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீஸ்ட் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அடுத்த படத்துக்கான பூஜை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து 6ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்புக்காக சென்னை இசிஆரில் பிரமாண்ட செட்டுகளும் போடப்படவுள்ளன.


மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!


இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை யார் எனும் கேள்வி கடந்த சில வாரங்களாகவே இருந்துவருகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு நடிகைகளின் பெயர்கள் அடிபட்டுவந்தன. குறிப்பாக, தமிழ், தெலுங்கில் பிஸியாக இருந்துவரும் தமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தனாவின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. விஜய்யின் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதால் அதில் அறிந்த முகங்களான இவர்களில் யாரேனும் ஒருவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுவந்தது.


                                                              


இந்நிலையில், இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இணைந்துள்ளார் நடிகை க்ரீத்தி சனோன். பாலிவுட் நடிகையான க்ரீத்தி சனோனிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளதாம். நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் மற்றும் டைகர் செராஃப்பின் கணபத் ஆகிய படங்களில் நடித்துவரும் க்ரீத்தி சனோனுக்குத் தமிழில் இதுவே முதல் படமாக அமையவுள்ளது. அதே நேரம், இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதனால் க்ரீத்தி சனோன் தவிர வேறு சில நடிகைகளும்கூட இப்படத்தில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


                                                                                                           


பீஸ்ட்டைப் போல விஜய்யின் இப்படமும் இந்தியில் டப் செய்யப்படும் பட்சத்தில் இந்தி நடிகை ஒருவர் படத்தில் இருந்தால் அது படத்துக்கு கூடுதல் பலமாக அமையும். அந்த அடிப்படையிலேயே  க்ரீத்தி சனோன் இதில் புக் செய்யப்படவுள்ளாராம்.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR