‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?

பீஸ்ட் படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2022, 01:23 PM IST
  • விஜய் நடித்துள்ள பீஸ்ட் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ்
  • பீஸ்ட் படத்தின் சென்சார் குறித்து தகவல்
  • பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்
‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா? title=

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் சென்சார் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, சில தினங்களுக்கு முன்பு பீஸ்ட் படம் சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நேற்று படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் பீஸ்ட் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இப்படத்தைப் பார்க்கலாம்; அதேநேரம், 12 வயதுக்கு கீழேயுள்ளவர்கள், பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் மட்டுமே படத்தைக் கண்டுகளிக்கவேண்டும்.

                                                           Beast

மேலும் படிக்க | பீஸ்ட்-உடன் ஒத்தைக்கு ஒத்தை மோதும் படம் : வெற்றி யாருக்கு!

அதேபோல பீஸ்ட் படத்தின் ரன்னிங் டைம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் 38 விநாடிகள் ஓடுமாம். அண்மையில் வெளியான நடிகர் அஜித்தின் வலிமை, 2 மணி நேரம் 58 நிமிடங்களை முதலில் ரன்னிங் டைமாகக் கொண்டிருந்தது. ஆனால் ரிலீஸ் ஆன சில நாட்களுக்கு பிறகு படத்தின் சில நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஓடிடிக்கு வரும் புது ரூல்ஸ்: இனி நினைச்சதெல்லாம் பாக்கமுடியாதாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News