பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மோடி முகத்தில் கத்தி : விஜய் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்


தில்ராஜு தயாரிக்கும் இப்படம் குறித்து பேசியிருந்த இயக்குநர் வம்சி,  ‘இந்தப் படத்தின் கதை மீதுதான் எனது ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது. இந்தப் படத்தில் நிச்சயம் புதிய விஜய்யை காணலாம்’ என கூறியிருந்தார்.



இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், ஜெகபதி பாபு, விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.  எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். 


மேலும் படிக்க | முன்னணி நடிகர்களுக்குக் குறிவைக்கும் உதயநிதி!


படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜு, விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  பூஜையின்போது விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா சுற்றிப்போடும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.



இந்நிலையில், படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு வெளியிட்டுள்ளார். அதனை இயக்குநர் வம்சி பைடிபள்ளியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 



இந்த வீடியோவிலும் விஜய்க்கு ராஷ்மிகா சுற்றிப்போடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்துவருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR