முன்னணி நடிகர்களுக்குக் குறிவைக்கும் உதயநிதி!

  ஆர்.ஆர்.ஆர். படத்துக்காக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Last Updated : Apr 7, 2022, 12:18 PM IST
  • சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ மே 13ஆம் தேதி ரிலீஸ்
  • ஆர்.ஆர்.ஆர். படத்துக்காக டான் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது
  • ‘டான்’ தமிழக விநியோக உரிமை உதயநிதியின் வசம் சென்றது
முன்னணி நடிகர்களுக்குக் குறிவைக்கும் உதயநிதி! title=

நெல்சன் இயக்கத்தில் நடித்த டாக்டர் படத்துக்குப் பின்னர் சிவகார்த்திகேயனின் எந்தப் படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அவர் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் ஏற்கெனவே ரிலீஸ் ஆகவேண்டியது; ஆனால் ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக டான் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்தது. அந்த வகையில் வருகிற மே மாதம் 13ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

அறிமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகனே கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

                                                                  don

மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!
இந்நிலையில் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது.

அதேபோல ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தையும் இந்நிறுவனமே கைப்பற்றியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் முன்னதாக வெளியான ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களையும் அந்நிறுவனம்தான் கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் முன்னணி நடிகர்கள் பலரது படங்களை இந்நிறுவனமே அடுத்தடுத்து வெளியிட்டுவருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News