நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படமானது ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு விஜய், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்ராஜு தயாரிக்கும் இப்படம் மீது பலருக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படம் குறித்து பேசிய இயக்குநர் வம்சி இந்தப் படத்தின் கதை மீதுதான் எனது ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது. இந்தப் படத்தில் நிச்சயம் புதிய விஜய்யை காணலாம் என கூறியிருந்தார்.



இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், ஜெகபதி பாபு, விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.  எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். முதல்முறையாக விஜய் புதிய கூட்டணியுடன் களமிறங்குவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு ஆவல் அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க | நஷ்டத்துக்கு காரணம் தனுஷ்தான்... அதிருப்தியில் ஹாட்ஸ்டார்?


இந்நிலையில் தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜு, விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | இரண்டு டாப் ஹீரோக்களுடன் கம்பேக் கொடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ?


சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டூடியோஸில் ஒரு வாரம் பாடல்களுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத் செல்லும் படக்குழு அங்கு மற்ற காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR