லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில்; விஜய், விஜய் சேதுபதி, மாலவிகா மோகனன், ஆண்ட்ரியா எரேமியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். 


’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி முடிந்தவுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதில் கோர்ட் சூட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்., ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து சொல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோர்ட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோர்ட் போட்டுப் போவோம் என்று வந்தேன். என்று கூறிய  பதிலைச் சற்று எதிர்பாராத அரங்கிலிருந்தவர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.