Beast Update: நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் (Actor Vijay) நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்க்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்த பின் சென்னையில், ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து அதில் பீஸ்ட் (Beast) படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். பிறகு சென்னை புறநகரில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்தனர்.


ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்


இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இதுவரை மூன்றுக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதனால் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மொத்தம் ஐந்து தினங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். மேலும் இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இளம் நடிகை ஜனனி துர்கா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ:மீண்டும் வளையோசை? கமல், அமலாவை கண் முன் கொண்டு வந்த விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR