விஜய்யின் பீஸ்ட் இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாகவுள்ளது. பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளிலும் பீஸ்ட் படம் பெரும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவைப் பொறுத்தவரை இப்படம் 426 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் கரியரில் அமெரிக்காவில் ஒரு படம் அதிக எண்ணிக்கையில் ரிலீஸாவது இதுதான் முதன்முறை. முதலிடத்தில் இருந்துவந்த பிகில் படத்தை பீஸ்ட் தற்போது முந்தியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படம் அட்வான்ஸ் புக்கிங்கில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ரிலீசுக்கு முந்தைய புக்கிங்கில் அஜித்தின் வலிமையைவிட விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிக வசூலைப் பெற்றுள்ளதாம்.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்: தீயாகப் பரவும் வைரல் போஸ்ட்!


ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த அஜித்தின் வலிமை கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியானது. இப்படம் அமெரிக்காவில் அட்வான்ஸ் புக்கிங்கில் சுமார் ரூ.3.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதேபோல ஆஸ்திரேலியாவில் ரூ.1.17 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.


                                                                                                      


இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் அமெரிக்காவில் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் ரூ.3.19 கோடி வசூல் குவித்துள்ளதாம். ஆஸ்திரேலியாவில் மட்டும் ரூ.1.27 கோடி ரூபாய் வசூலாகப் பெற்றுள்ளதாம். அந்த வகையில் இந்த இரு நாடுகளிலும் அஜித்தின் வலிமையை விஜய்யின் பீஸ்ட் அட்வான்ஸ் புக்கிங் வசூலில் முறியடித்துள்ளது. ரிலீசுக்கு பின்பான ஒட்டுமொத்த கலெக்சனிலும் பீஸ்ட் படம் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR