தளபதி 68: ‘லியோ’ படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 68. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக படக்குழுவினர் அமெரிக்காவில் உள்ள ஒரு திரைப்பட தொழில்நுட்ப அகாடமிக்கு சென்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 விஜய் பார்த்த படம்:


ஹாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. அப்படி இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் பட சீரிஸ்களுள் ஒன்று The Equalizer (தி ஈக்குவலைஸர்). Equalizer படங்கள் ஆக்ஷன், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகின்றன. இதன் மூன்றாம் பாகமான The Equalizer 3 திரைப்படம் நேற்று வெளியானது. இதில் ஹீரோவாக டான்சல் வாஷிங்டன் (Denzel Washington) என்பவர் நடித்துள்ளார். இவர் ஹாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர். 


Fanboy ஆக மாறிய விஜய்:


The Equalizer 3 படத்தை நடிகர் விஜய் நேற்று அமெரிக்காவில் பார்த்துள்ளார். அவர் படத்தை பார்த்து விட்டு டான்சல் வாஷிங்டனை ரசித்ததைதளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படம் பிடித்து படம் பிடித்துள்ளார்.



இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், “யாருய்யா இந்த டான்சல் வாஷிங்டன்..?” என்று தேடி வருகின்றனர். 


மேலும் படிக்க | பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்


யார் இந்த டான்சல் வாஷிங்டன்..? 


உலகளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த நடிகர்களுள் ஒருவர் டான்சல் வாஷிங்டன். இவர், நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர், மேடை கலைஞராக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தனது திரை வாழ்க்கையில் எக்கச்சக்க உயர் விருடுகளை பார்த்தவர் இவர். இவர் பெயரில் நியூ யார்க் நகரில் ஒரு திரையரங்கம் உள்ளது. 68 வயதில் இருக்கும் இவர், தினமும் ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பவர். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், தன்னடக்கத்தை பேணும் பிரபலமாகவும் வலம் வருகிறார். இதனாலேயே நடிகர்கள் உள்பட பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். 


தளபதி 68 அப்டேட்:


விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு, ‘லியோ’ படத்தின் ரிலீஸிற்கு பிறகு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களுக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது. நடிகர் விஜய், இதில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை பிரியங்கா மோகன் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னொரு நாயகியாக ஜோதிகா நடிப்பார் என கூறப்பட்டது ஆனால் அவருக்கு பதிலாக அந்த கதாப்பாத்தித்தில் தற்போது சிம்ரன் அல்லது சினேகா நடிப்பர் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


இவர்கள் மட்டுமன்றி, நடிகர் ஜெய் மற்றும் நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் அரசியல் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘Welcome to the future…’


தளபதி 68 படத்தின் லுக் டெஸ்டிற்காக பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். இதில், விஜய்யின் லுக் டெஸ்ட் நடைபெறும் போது அதை போட்டோ எடுத்து பதிவிட்ட அர்ச்சனா, “Welcome to the future” என்று குறிப்பிட்டிருந்தார். 


மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் ‘இந்த’ நடிகை இடம்பெற இருந்தாரா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ