தளபதி 65 படப்பிடிப்பு வேண்டாம்: விஜய் அதிரடி முடிவு, காரணம் என்ன?

தளபதி 65 படத்திற்காக பிரமாண்டமாய் தயாரான ஷாப்பிங் மால் செட் விஜய் கூறியதால் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 11, 2021, 03:59 PM IST
தளபதி 65 படப்பிடிப்பு வேண்டாம்: விஜய் அதிரடி முடிவு, காரணம் என்ன?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. விஜய்க்கு (Actor Vijay) ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் (Thalapathy 65) முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் (Vijay) தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார். ஜார்ஜிவாவில் படப்பிடிப்பு நடந்த முடிந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.

ALSO READ | கொரோனா பரவல் காரணமாக Thalapathy 65 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வெளிநாட்டில் உள்ள பிரமாண்டமான மால் ஒன்றின் செட் போடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திடீரென செட் போடும் பணியை நிறுத்த நடிகர் விஜய் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த பணியை உடனடியாக நிறுத்தும்படி விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து மால் செட் போடும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு இந்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் தகவல் கூறப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News