விஜய்க்காக கத்திய ரசிகர்கள்! அமைதியாக இருக்க சொன்ன கமல்!
கமலின் `விக்ரம்` பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தி கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பல நட்சத்திரங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், நீண்ட நாட்கள் கழித்து தற்போது இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. ஆனாலும், இவர்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் படிக்க | 'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
பொதுவாக தளபதி விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. இந்நிகழ்ச்சியில் விஜய்யின் பெருமையை தூக்கி நிறுத்தும் விதமாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் மேடையில் படம் குறித்தும் கமல் குறித்தும் பேசினார். கமல் சார் நீங்கள் வருடத்திற்கு ஒரு படமாவது கண்டிப்பாக நடிக்க வேண்டும், கமல் சாரை யாராலும் மிரட்ட முடியாது என்று புகழாரம் சூட்டினார். அதனைத்தொடர்ந்து பேசியவர் தளபதி விஜய் என்று ஒரு வார்த்தை கூற அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் உடனே விஜய் பெயரை கேட்டு கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அந்த அரங்கத்தையே அதிர செய்தனர்.
சிறிது நேரத்திற்கு அந்த இடம் முழுவதும் தளபதி விஜய் பெயர் தான் எட்டுத்திக்கும் ஒலித்தது, ரசிகர்களின் சத்தத்திற்கு முன்னாள் உதயநிதியால் வேறெதுவும் பேசமுடியவில்லை. ரசிகர்களின் சத்தம் அடங்காததால் நடிகர் கமல் உடனே அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறினார், அதைக்கூட ரசிகர்கள் ஒரு பொருட்டாக நினைக்காமல் தொடர்ந்து தளபதி விஜய் என்று கத்திகொண்டே இருந்தனர். இந்த ஒரு சம்பவமே விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை நன்கு காமிக்கிறது, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது, ஆனால் அந்த விமர்சனம் படத்திற்கு மட்டும் தான் எப்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் விஜய்க்கு உள்ளது என்பதை ரசிகர்கள் இதன்மூலம் நிரூபித்துள்ளனர்.
மேலும் படிக்க | நடிகர் விக்ரம் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR