இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் பீஸ்ட், ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் உளவுதுறை ஏஜெண்டாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ராணுவத்தில் இருந்து ஊருக்கு வரும்போது, தீவிரவாதிகளை வேட்டையாடுவதுபோல் விஜய் நடித்திருந்த திரைப்படம் துப்பாக்கி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஏ.ஆர். ரஹ்மானுக்காக திரைத்துறையினருக்கு பாரதிராஜா வைத்த வேண்டுகோள்


வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு இக்கதையையொட்டிய ஜானரில் விஜய் நடித்திருப்பதால், இப்படமும் அதேபோன்றதொரு வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்டில் இருந்து ஏற்கனவே ரிலீஸாகியிருக்கும் அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா பாடல்கள் யூ டியூப்பை கலங்கடித்த நிலையில், இன்று மூன்றாவது சிங்கிள் ரிலீஸாக இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மூன்றாவது சிங்கிள் ரிலீஸாகும் என அறிவித்துள்ளது. இந்த சிங்கிளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், விஜய்கே சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார் அவருடைய அப்பா சந்திரசேகர். 



அதாவது பீஸ்ட் மூன்றாவது சிங்கிள் ரிலீஸாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்த டிவிட்டர் பதிவுக்கு, தன்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில் இருந்து ஃபையர் சிமிலியை கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விஜய்யுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி, மீண்டும் மகனுடன் இணைந்துவிட்டார் என சிலர் கமெண்டும் அடித்துள்ளனர்.



விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடு தொடர்பாக மகன் விஜய்யுடன் மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு, அவருடன் பேசாமல் இருந்த சந்திரசேகர், பொதுவெளியிலும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். பின்னர், படங்களில் வரிசையாக ஆர்வம் காட்டினார். யூடியூப்பிலும் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி, தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பகிர்ந்து கொண்டு வருகிறார். 


மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR