மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை மாலவிகா, நான் பார்த்த நடிகர்களில் விஜய் மிகவும் எளிமையான நடிகர் என புகழ்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் காணப்பட்டவர் மாலவிகா மோகனன். இந்த திரைப்படத்தில் ஒரு சுருக்கமான பாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது தனது இரண்டாவது தமிழ் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். அதாவது தனது இரண்டாம் படத்திலேயே தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவருடன் தனது திரை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.


பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகை., "விஜய் நான் பணிபுரிந்த மிக எளிய இணை நடிகர். படப்பிடிப்பு முழுவதும், நான் எங்கள் நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவருடன் பணிபுரிவது போல் உணரவில்லை" என்று கூறி பாராட்டினார்.


மேலும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக புகழ்ந்தார்.


நடிகையை தொடர்ந்த மேடையில் குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட வந்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்., "குட்டி ஸ்டோரி இசையமைப்பதன் மூலம் நான் ஆல்பத்தைத் தொடங்கினேன். நீங்கள் (பார்வையாளர்களைச் சுட்டிக்காட்டி) அனைத்து பாடல்களையும் அறிந்திருப்பதால், இந்த பாடலை தற்போது உங்கள் முன் வழங்குகிறேன்" என கூறி வெளியிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர்., கத்தி தனது வாழ்க்கையில் ஒரு இடைவெளியைக் கொடுத்ததாகக் கூறினார். மேலும் "நான் 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் கைகோர்த்துள்ளேன். இந்த இடைவெளியை இந்த ஆல்பம் பூர்த்தி செய்யும் என் நான் நம்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.


இந்த ஆல்பத்தில் 12 பாடல்கள் உள்ளன, அவற்றில் எட்டு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன என்றும் அனிருத் தெரிவித்தார். இன்னும் இரண்டு பாடல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்றும் அவர் உறுதியளித்தார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில்; விஜய், விஜய் சேதுபதி, மாலவிகா மோகனன், ஆண்ட்ரியா எரேமியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.