Vijay Makkal Iyakkam: நடிகர் விஜய் மக்களுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார், இதனை அவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செய்து வருகிறார். இந்த இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் உள்ளனர். சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 1600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழா, பல அரசியல் பிரமுகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் மக்களிடையே விஜய்க்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டத் தலைவரும் அவர்களின் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தலா மூன்று பேரை அழைத்து வர உத்தரவிடப்பட்டிருந்தது. 


இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "விஜய்யின் சொல்லுக்கு இணங்க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருக்கிறது. அவர்களுடன் கலந்து ஆலோசித்து எவ்வாறு இந்த அணி செயல்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. 


மேலும் படிக்க | டார்கெட் 600 கோடி..! ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் இவ்வளவா..?


3 லட்சம் பேர்


வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளிட்ட எல்லா தளத்திலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அணியில் சுமார் 3 லட்சம் பேர் இருந்து செயல்படுகின்றனர்.  அவர்களுடன் ஆலோசித்து எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்து அதற்கேற்ப இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 


இந்த அணியில் ஒரு தொகுதிக்கு குறைந்தது 6 பேர் இருப்பார்கள். அதன் அடிப்படையில் இன்று வந்திருக்கிறார்கள். மேலும் சிலர் வந்து கலந்திருக்கிறார்கள். அடுத்ததாக பல்வேறு அணிகள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது" என்றார்.


கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?


பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் அல்லது பகிருதல் செய்யக் கூடாது என்றும் எந்த வகையிலும் தனி நபர் தாக்குதல் இருக்கக் கூடாது என்றும் ஆபாசமாக பதிவிட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என நடிகர் விஜய், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு உத்தரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | ஜவான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! படம் எப்படியிருக்கு? பார்த்தவர்கள் சொன்ன ரிவ்யூ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ