நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் இன்று தொடங்கப்பட்டது. இதற்காக ஈசிஆரில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய "தளபதி விஜய் குருதியகம்" என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றேம். 



இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் முன்வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ளவும், பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.


மேலும் படிக்க | 'புஷ்பா-2' படத்திலிருந்து விலகிய பஹத் பாசில்? விஜய் சேதுபதி தான் காரணமா?


"தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.


இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூ ட்யூப், இணையதளம் (Facebook, Instagram, Twitter, Youtube Channel & Website) பக்கங்களையும் திறந்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம். 


 



மற்றபடி, இன்றைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் அனைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை மாவட்ட தளபதி விஜய் சிறப்பித்துள்ளனர். எங்கள் பக்கத்தில் வரும் செய்திகளே அதிகாரப்பூர்வமானது; மற்றும் பக்கத்தின் நிறை குறைகளை, பின்னூட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டினால் எங்கள் சேவைகளை மேலும் சிறப்பிக்க உதவியாக இருக்கும். 


அன்பார்ந்த பத்திரிக்கை நண்பர்களே, இந்த செய்தியையும் மற்றும் இந்த செயலியின் சேவை மூலம் அனைத்து மக்களும் பயன்பெறவும், இந்த செய்தியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து உதவ வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR