விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தில் அவரது காஸ்ட்யூம் குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட  நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக கோடிக் கணக்கில் வசூலை வாரிக் குவித்துவருவதால் இப்படம் பெரும்  கலெக்சனை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஏப்ரலில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் அதன் தேதி குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


                                                                        


தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14இல் இப்படம் வெளியாகலாம் எனக் கூறப்பட்டுவந்தது. இதனிடையே கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள  ‘கே.ஜி.எஃப்-2’ படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜய்யின் பீஸ்ட் ஒரு நாள் முன்னதாக அதாவது ஏப்ரல் 13ஆம் தேதியே வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்யின் காஸ்ட்யூம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படத்தில் படம் முழுக்கவே ஒரேயொரு உடையில் மட்டுமே விஜய் தோன்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், பிளைன் வெள்ளை நிற டீசர்ட்டில் அவர் படம் முழுக்க வருவார் எனக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ஷமியிடம் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்: வைரல் வீடியோ!


பீஸ்ட் திரைப்படத்தின் திரைக்கதை, ஒருநாளில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் விஜய்க்கு ஒரே காஸ்ட்யூம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பீஸ்ட்டில் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளாக அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடலில் கறுப்பு, வெள்ளை என வெவ்வேறு வண்ணம் கொண்ட காஸ்ட்யூம்களில் விஜய் நடித்திருந்தார். இதனால் படத்தின் பாடல் காட்சிகளுக்கும் ஒரேவிதமான காஸ்ட்யூம்களில் விஜய் நடித்திருக்கமாட்டார் என எதிர்பார்க்கலாம். ஒரே நாளில் நடக்கும் கதை மற்றும் ஒரே காஸ்ட்யூமில் தோன்றும் கதைகளில் நடிகர் விஜய் நடிப்பது அரிது எனும் காரணத்தால் இப்படம் ரசிகர்கள் மத்தியில்  கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | பற்றி எரியும் சர்ச்சைப் பதிவு: ஷாருக்கானை சீண்டுகிறாரா அட்லி?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR