விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் தீபாவளி; தளபதி 64 பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வருடத்தின் கடைசி நாள் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் தீபாவளி; தளபதி 64 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிப்பு
"பிகில்" படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 64’. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன்பு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கைதி" பெரிய அளவில் வெற்றி பெற்று, அனைவரின் பாராட்டையும் பெற்றது. நடிகர் விஜய் பற்றி புதுசா எதுவும் சொல்ல தேவையில்லை. அவரின் ஒவ்வொரு படமும் வசூலில் சாதனை செய்து வருகிறது. இருவரும் இணைந்து உள்ளத்தால் ‘தளபதி 64’படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா அர்ஜுன் தாஸ உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
‘தளபதி 64’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், பல ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகள் வியாபாரமாகிவிட்டன என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது.