தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தனது கலர்ஃபுல் கேரியரில் 50 படங்கள் என்ற மாயாஜால மைல்கல்லை தொட்டவர் விஜய் சேதுபதி. 'குரங்கு பொம்மை' புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 'விஜேஎஸ் 50' திரைப்படம் சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  'விஜேஎஸ் 50' படத்தை தயாரிக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் தி ரூட் கைகோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்துக்கு இணை தயாரிப்பாளராகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தையும் தயாரிக்கும் ஜெகதீஷ் பழனிசாமிக்கு சொந்தமான நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குட்டி நயன்தாராவின் கலக்கலான வைரல் போட்டோ ஷூட்..!



'விஜேஎஸ் 50' படத்தின் டைட்டில் லுக் ஜூலை 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும், அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜன், முனீஸ்காந்த், அருள் தாஸ் மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'காந்தாரா' புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.  இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர உள்ளது. இதில்  ​​சிவகார்த்திகேயன் தனது படத்தில் மக்கள் செல்வன் இருப்பதை அதிகாரப்பூர்வமாக ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் உறுதிப்படுத்தினார். விஜய் சேதுபதி, மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.  இந்த கிளிப்பைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன், "என் அன்புச் சகோதரர் விஜய் சேதுபதி, உங்கள் அன்பான சைகைக்கு நன்றி-மாவீரனில் உங்கள் குரலில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.



இந்த முக்கிய வெளிப்பாட்டைத் தொடர்ந்து மாவீரன் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. தேசிய விருது பெற்ற 'மண்டேலா' புகழ் மடோன் அஷ்வின் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் சிவாவின் கேரியரில் ரிலீஸுக்கு முந்தைய மிகப் பெரிய வணிகமாக அமைந்தது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மாவீரன் படத்தை தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடப்பட்டது.  மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சுனில், சரிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக வித்து அய்யன்னா, படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ், அதிரடி இயக்குநராக யானிக் பென், நடன இயக்குநராக ஷோபி பால்ராஜ், கலை இயக்கத்தில் குமார் கங்கப்பன், அருண் வெஞ்சாரமூடு ஆகியோர் பணியாற்றுகின்றனர்.


மேலும் படிக்க | சினிமாவுக்கு குட்-பை சொல்லும் சமந்தா? RRR பார்ட் 2 அப்டேட்-இன்றைய சினிமா செய்திகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ