சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மாவீரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 11, 2023, 03:02 PM IST
  • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம், மாவீரன்.
  • மிஷ்கின் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
  • நேற்று நடைப்பெற்ற இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மிஷ்கின் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்டார்.
சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?  title=

தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகயேனின் அடுத்த படம், மாவீரன். இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்க, அதிதி ஷங்கர் படத்தின் நாயகியாக நடிக்கிறார். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது. 

மாவீரன் திரைப்படம்..

‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் படம், மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபல நடிகை சரிதாவும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், வில்லனாக பிரபல இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் நடித்துள்ளார். நேற்று நடைப்பெற்ற மாவீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இவர், சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்டுள்ளார். 

மேலும் படிக்க | தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

"சிவகார்த்திகேயன் ஒரு.."

நேற்றைய பட விழாவில் பேசிய மிஷ்கின், தமிழ் சினிமாவின் ஒழுக்கமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து விட்டதாக கூறினார். மேலும், தனக்கு ஒழுக்கமாக இருப்பது மிகவும் கடினம் என்றும் எப்படித்தான் சிவகார்த்திகேயன் இவ்வளவு நாள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார் என தெரியவில்லை என்றும் இதற்காகவே சிவாவுக்கு ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். பின்பு, சிவகார்த்திகேயன் உண்மையிலேயே ஒரு ‘ஸ்வீட் பாய்’ என்றும், அவர் அனைவரிடமும் நல்ல பையன் என்று பெயரெடுத்தவர் என்றும் கூறினார். 

நடிகருக்கு சாபம்..

மிஷ்கின் மேடையில் பேசுகையில், சிவகார்த்திகேயன் பற்றி பிறர் கூறிய போதெல்லாம் அதை வெறும் கதை என நினைத்ததாகவும் பழகி பார்த்த பின்புதான் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “15 பேரை அடிக்கும் ஒரு சண்டை காட்சியை படம் எடுத்தோம். ஷாட் முடிந்த பிறகு, அடி வாங்கிய 15 பேரிடமும் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டார். அந்த ஒரு விஷயம் போதும், சிவகார்த்திகேயனின் சுபாவம் பற்றி கூற. இதற்காகவே அவர் 40-50 வருடங்கள் சினிமவில் இருக்க வேண்டும் என சாபம் விடுகிறேன்” என்று கூறினார். இதைக்கேட்ட விழாவில் இருந்தவர்க்ள விழுந்து விழுந்து சிரித்தனர். 

ரஜினியுடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட மிஷ்கின்..

சில நாட்களுக்கு முன்னர் மாவீரன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய மிஷ்கின், சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார். “நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ‘ரஜினி போல அடக்கமானவர்’ என அடிக்கடி என்னிடம் கூறுவார். சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் அல்ல..ரஜினியேதான்” என்று இவர் கூறிய விஷயம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. இதற்கு மிஷ்கின் நேற்றைய விழாவில் விளக்கம் கொடுத்தார். ‘ரஜினி மாதிரி சிவா..’ என அவர் கூறியதை ரசிகர்கள் பலர் தவறாக எடுத்துக்கொண்டதாகவும் உண்மையில் ரஜினியிடம் இருக்கும் பல நல்ல குணங்கள் சிவகார்த்திகேயனிடம் இருப்பதாகவும் கூறினார். 

பாலிவுட்டில் நுழையும் சிவகார்த்திகேயன்? 

தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரில் தயாராகியிருக்கும் சிவகார்த்திகேயனின் படம், தெலுங்கில் ‘மஹாவீரடு’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதன் ப்ரமோஷன் விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அதில், பிரபல நடிகர் ஆத்வி ஷேஷ் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டார். சிவகார்த்திகேயன், அடுத்து பாலிவுட்டில் களமிறங்க உள்ளதாக கூறிய அவர், இந்த தகவலை மேடையில் பேசியதற்கு சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பும் கேட்டுக்காெண்டார். 

பட ரிலீஸ்..

‘மாவீரன் ‘ திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 14) வெளியாகிறது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் ‘மஹாவீரடு’ என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. ட்ரைலரில் ஃபேண்டசி அம்சங்கள் பல படத்தில் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்கள் இதைக்காண ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா.. காத்திருக்கும் ஆப்பு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News