எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசன் என ஆரம்பித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கான போட்டி, ரஜினி-கமல் போன்ற நடிகர்களை தொட்டு விஜய்-அஜித்துடன் முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களை அடுத்தும் இரண்டு நடிகர்கள் அந்த போட்டிக்கு ரெடியாக நிற்கின்றனர். அவர்கள்தான், விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் வெவ்வெறு காலகட்டங்களில் சினிமாவிற்குள் வந்தாலும் சரிசமமான ரசிகர்களைத்தான் கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும், முதன் முதலாக ஒரு படத்தில் கைக்கோர்த்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படக்குழுவின் சர்ப்ரைஸ் அப்டேட்…


நடிகர் சிவகார்த்திகயேன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம், மாவீரன். இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருக்கிறார். அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மிஷ்கின் மற்றும் சரிதா போன்றோரும் நடித்துள்ளனர். இதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்த படத்தின் சர்ப்ரைஸான ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்து. சொன்ன படியே, அந்த அப்டேட்டையும் வெளியிட்டது. 


மேலும் படிக்க | சினிமாவுக்கு குட்-பை சொல்லும் சமந்தா? RRR பார்ட் 2 அப்டேட்-இன்றைய சினிமா செய்திகள்!


‘மாவீரன்’ படத்தில் விஜய் சேதுபதி..


மாவீரன் பட ட்ரைலரில், சிவகார்த்திகேயனுக்கு ஏதோ பவர் இருப்பது போலவும் அதனால் அவர் சவாவல்களை சந்திப்பது போலவும் காண்பித்திருந்தனர். அது என்ன பவர்? என்பது இன்று படக்குழு வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் தெரிந்திருந்தது. ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு ஒரு குரல் கேட்கிறது என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, “யார்டா அந்த குரல்…?” என கேட்கிறான் வில்லன். அதற்கு விஜய் சேதுபதியின் குரல் பதிலாக வருகிறது. 



படக்குழு வெளியிட்டிருந்த இந்த வீடியோ, தற்போது பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. 


முதன் முறையாக கைக்கோர்த்த நடிகர்கள்..!


15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஹீரோக்களின் படங்களில் துணை கதாப்பாத்திரமாக இருந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோ ஆனார். இதையடுத்து மெல்ல மெல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி, அந்த உலகிலும் தனக்கென தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்தவர் சிவகார்த்திகேயன். இப்படி இருவரும் தங்களுக்கே உரிய ஸ்டைலில் சினிமாவில் நிலையான வளர்ச்சியை கண்டவர்கள். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளதை பார்க்க பெருமையாக உள்ளதாக சில ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..


‘மாவீனர்’ படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் எக்கச்சக்க வரவேற்பினை பெற்றது. முன்னர் காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் சமீப காலங்களில் புதுமை காட்டி வருகிறார். அந்த புதுமை முகங்களில் ஒன்றாக, மாவீரன் திரைப்படம் இருக்கும் என நம்பப்படுகிறது. அது மட்டுமன்றி, மண்டேலா படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த மடோன் அஷ்வின் மாவீரன் படத்திலும் கண்டிப்பாக நச்சென்று சில அம்சங்களை வைத்திருப்பார் என நம்பப்படுகிறது. 


வண்ணாரப்பேட்டையில பாடல்..


மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நாயகி அதிதி சங்கரும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர். இதுவரை ஹீரோவிற்கு இண்ட்ரோ பாடல்கள் பாடி வந்த சிவகார்த்திகேயன், முதன் முறையாக ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் முலம் டூயட் பாடகனாக களமிறங்கியுள்ளார். இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், தற்போது யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கள் உள்ள ஒரு பாடலும் இதுதான். இதற்கு டான்ஸ் ஆடி, சிலர் ரீல்ஸ் ஆகவும் பதிவிட்டு வருகினறனர். தற்போது வரை இப்பாடல் 9.3 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. 


மேலும் படிக்க | குட்டி நயன்தாராவின் கலக்கலான வைரல் போட்டோ ஷூட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ