புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மற்றும் கோகுல் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ஜங்கா படமத்தின் படப்பிடிப்பு பாரீஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கதைக்கு ஏற்றது போல தனது கெட் அப்பை மாற்றி நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார்.
பாரீஸில் உள்ள தாதாவாக விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா ஷைகல் நடிக்கிறார்.
இதில் அவர் பாரீஸில் பிறந்து வளர்ந்த செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
ராஜூ சுந்தரம் நடன இயக்குநராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் கதை பிடித்து போனதால் தனது சொந்த தயாரிப்பிலே 20 கோடி பட்ஜெட்டில், இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படமாக ஜங்கா தயாராகி வருகிறது.
இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பாரீஸில் நடைபெறவுள்ளது. தற்போது பாரீஸின் புகழ்பெற்ற இடமான ஷேம்பர்டு கோட்டையில் நடைபெற்று வருவதாக விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதோடு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.