Vijay Sethupathi Birthday-Check His Net Worth and Salary Details: தமிழ் திரையுலகில் துணை நடிகராக களமிறங்கி, தற்போது பான் இந்திய அளவில் பெரிய நடிகராக வளர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி. இவர், தனது 46வது பிறந்தநாளை இன்று (ஜனவரி 16) கொண்டாடுகிறார் (Vijay Sethupathi Birthday). இதனால், இவர் குறித்த தகவல்கள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உழைப்பால் உயர்ந்த விஜய் சேதுபதி!


தமிழ் திரையுலகில் உள்ள பல நடிகர்கள், தங்களது உழைப்பால்தான் உயர்ந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான நடிகர்கள், சினிமாவை பின்னணியாக கொண்டவர்களாக உள்ளனர். தாங்களாகவே சினிமாவிற்கு வந்து உயர்ந்தவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு மிகவும் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். அந்த வெகு சிலரில் தமிழ் மக்களின் மனம் கவர்ந்தவர், விஜய் சேதுபதி. 


‘புதுப்பேட்டை’ படத்தில் ஒரே ஒரு டைலாக் பேசி, ஒரு ஓரமாக நிற்கும் துணை நடிகராக இருந்த இவர், இன்று பான் இந்தியா அளவில் வெளியாகும் தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். மனிதர்களை மனிதர்களாக மதித்து, பிறரது முன்னேற்றத்திற்கும் வழிவிடும் விஜய் சேதுபதியை மக்களுக்கு மட்டுமன்றி பிற பிரபலங்களுக்கும் பிடிக்கும். 


மேலும் படிக்க | மலைக்க வைக்கும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு! அட..இவ்வளவு பெரிய பணக்காரரா?


சம்பள விவரம்..


விஜய் சேதுபதி, சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் துபாயில் கணக்காளராக வேலைப்பார்த்து வந்தார். சினிமா மீதிருந்த உந்துதலால், திரைத்துரைக்குள் நுழைந்த இவருக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த படம், ‘தென்மேற்கு பருவக்காற்று’. இந்த படத்தில்தான் அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்தார். நூறுகளிலும் ஆயிரங்களிலும் தனது சினிமா பயணத்தை ஆம்பித்த இவர், இன்று கோடிக்கணக்கில் ஒரு படத்திற்காக சம்பளம் வாங்கி வருகிறார். 


கடந்த ஆண்டு இவர் நடித்த ஜவான் படம் வெளியானது. இந்த படத்தில் இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் நடிப்பதற்காக அவர் 21 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது (Vijay Sethupathi Salary). அதே போல, இவரது மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதில், அவர் கத்ரீனா கைஃப்பிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர், ரூ.21 கோடி சம்பளமாக பெற்றதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது (Vijay Sethupathi Salary For Merry Christmas). 


சொத்து விவரம்..


விஜய் சேதுபதி, ஒரு பிராண்டிற்கு தூதுவராக இருக்க, அல்லது விளம்பர படங்களில் நடிக்க ரூ.50 லட்சம் வரை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. இவருக்கு, தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மற்றும் எண்ணூரில் இரண்டு வீடுகள் சொந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமன்றி, விஜய் சேதுபதி பல விலை உயர்ந்த ஆடம்பர காரகளையும் தனது கார் கலெக்‌ஷனில் வைத்துள்ளாராம். ரூ. 1.76 கோடி மதிப்பு மிக்க BMW 7 சீரிஸ் கார், சுமார் 39 லட்சம் மதிப்பு மிக்க மினி கூப்பர் கார், டயோட்டா மற்றும் இன்னோவா ஆகியவை இவரிடம் இருக்கும் சொகுசு கார்களின் லிஸ்டில் உள்ளது.


ஆடம்பர வீடு, சொகுசு கார்கள், மாத வருமானம் என எல்லாம் சேர்த்து விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு ரூ.175 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது (Vijay Sethupathi Net Worth). ஆனால் இது குறித்த அதிகாப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் சம்பள விவரம்! அடடே..இத்தனை கோடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ