சில படங்கள், சில நடிகர்கள், சில இயக்குனர்கள்…. இப்படி சில விஷயங்கள் எப்போதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றன, விரும்பப்படுகின்றன, நேசிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ‘சில நடிகர்களின்’ வரிசையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) நிச்சயமாக ஒரு இடம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை பாதித்துள்ளன. அவ்வகையில் அவர் நடித்து வெளிவரவுள்ள அடுத்த படமான ‘க/பெ. ரணசிங்கம்’ (Ka Pae Ranasingam) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், இப்படம் வெளியாகவுள்ள தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வந்துள்ளது. கொரோனா காரணமாக திரை அரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் படமான ‘க/பெ. ரணசிங்கம்’ படமும் சமீபத்திய பாணியைப் பின்பற்றி OTT மற்றும் DTH தளங்களில் (OTT DTH Platform) அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.



ALSO READ: அடுத்த படம் குறித்து அதிரடி ட்விட் போட்ட மாஸ்டர் பட இயக்குனர்....


இந்த கொரோனா காலத்தில் OTT தளங்களில் படங்கள் வெளியாவது புதிதல்ல. இருப்பினும், இந்த படத்தில் இன்னும் சில சிறப்பம்சங்களும் உள்ளன. இப்படம், OTT தளத்தில் Zeeplex-ல் ஐந்து மொழிகளில் 150 நாடுகளில் வெளியாகும் முதல் படமாகும்.


‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) நடித்துள்ளார். விருமாண்டி (Virumandi) இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


ரங்கராஜ் பாண்டே, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்து, பவானி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். ஜிப்ரான் (Jibran) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ALSO READ: OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம்..!