இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த`நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
புச்சி பாபு சானா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த தெலுங்கு படம் உப்பென. இந்த படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்து இருந்தார். பின்னர், பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க கிருத்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி தன்னால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மகாராஜா படம் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது! காரணம் என்ன?
மஹாராஜா படத்திற்கான புரமோஷன் வேளைகளில் உள்ள விஜய் சேதுபதி க்ரித்தி ஷெட்டியுடன் ஏன் நடிக்க மறுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். பொன்ராமின் படத்தில் க்ரித்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் புச்சி பாபு சனாவின் உப்பேனாவில் தனக்கு மகளாக நடித்துள்ளார். அதனால் அவருடன் நடிக்க மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “டிஎஸ்பி படத்தில் கிருத்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டேன். உப்பெனாவில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளேன். நாங்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது க்ரித்தி மிகவும் பதட்டமாக இருந்தார். ஒரு முக்கியமான காட்சியை எடுக்க வேண்டி இருந்தது.
அப்போது படப்பிடிப்பில் இருக்கும்போது என்னை அவருடைய உண்மையான அப்பாவாக நினைக்கும்படி அவரிடம் கூறினேன். க்ரித்தி என் மகனை விட சில வயது மூத்தவள். எனவே என்னால் க்ரித்திக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறி விட்டேன்" என்று நேர்காணலில் தெரிவித்தார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அனுக்ரீத்தி வாஸ் நடித்து இருந்தார். டிஎஸ்பி படம் வெளியான போது படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது. க்ரித்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நிராகரிப்பது குறித்து விஜய் பேசுவது ஏற்கனவே தெரிவித்துள்ளார். “நான் தெலுங்கு படமான உப்பேனாவில் அவருக்கு தந்தையாக நடித்தேன். எனவே இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியுடன் நடிக்க முடியாது என்று படக்குழுவிற்கு தெரிவித்தேன்" என்று கூறி இருந்தார்.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மஹாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படம் ஆகும். வரும் ஜூன் 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
மேலும் படிக்க | நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வந்த அரிய வகை நோய்! அவரே பகிர்ந்த சோகமான தகவல்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ