விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. நானும் ரௌடிதான் திரைப்படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் இது. இதில் நயன்தாராவுன், சமந்தாவும் நடித்துள்ளார். ரொமான்ஸ் மூவியாக தயாராகியுள்ள இந்தப் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | 'ஓ சொல்றியா' பாட்டு பாக்க ஆசையா? ரிலீஸ் தேதி அறிவிப்பு


இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ’ரெண்டு காதல்’ ’டூ டு டூ’ பாடல்கள் யூ டியூப் ஹட் அடித்த நிலையில், அண்மையில் 3வது பாடலாக ‘நான் பிழை’ வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் யூ டியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அனிரூத் டான்ஸ் ஆடிய டூடுடூ பாடல் 3 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதனை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம், தங்கள் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 



ALSO READ | ALSO READ | ஹிந்தி, தெலுங்கில் வெளியான Valimai -ன் மிரட்டலான போஸ்டர்..!


’நான் பிழை’ விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த சிங்கிள், அதாவது 4வது சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் சமந்தா - விஜய் சேதுபதியின் ரொமாஸ் சாங் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயரான ராம்போவும் - கதிஜாவாக வரும் சம்ந்தாவும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பாடல் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. ஒட்டுமொத்ததில் அழகான ரொமான்ஸூக்கு பஞ்சமிருக்காது என நம்பிக்கையும் காத்திருக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR