சென்னை, கோடம்பாக்கம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு (TN Assembly Polls 2021) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணி வரை 13.80 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நண்பகல் 12 மணி நிலவரப்படி 34.21 சதவீத வாக்குகள் பதிவானது. மதியம் 1.00 மணி வரை 39.61% வாக்கு பதிவாகியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் தங்கள் வாக்கை வாக்குச்சாவடியில் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மக்கள் செல்வன் விஜய் சேதியும் தனது வாக்கை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாதி, மதங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு, மனிதர்கள் தான் முக்கியம். சாதி, மதத்திற்கு எப்போதும் அப்பாற்பட்டவன் நான். சாதி, மதங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தெரிவித்தார்.


இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் பலர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர் . அதேபோல எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உட்பட்ட அரசியல் தலைவர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை பதிவு செய்தனர். 


ALSO READ | தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்த தளபதி நடிகர் விஜய்!


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவுக்கு மத்தியில், வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், இரட்டை இலை (AIADMK Symbol) சின்னத்தில் விளக்கு எரிவதாக எழுந்த புகாரை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் சோதனை செய்ததில், அது சரியாக வேலை செய்கிறது என்றும், வழக்கம் போல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் திருப்பூர் ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். 


இன்று ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடக்கின்றன.


ALSO READ | எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு என புகார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR