சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, தயாரிப்பாளர் இசக்கி துரை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பிரிட்டோ கலை இயக்கத்தை கவனிக்கிறார். மேலும் மிரக்கிள் மைக்கேல் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.


இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் வேங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.  இரு ஹீரோயின்கள் உள்ளனர். 


இந்த படத்தில் விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். தற்போது ஹீரோயின்களின் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.