முத்தையா முரளிதரன் பயோபிக் இல் விஜய் சேதுபதி உறுதி...விரைவில் படபிடிப்பு
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
’மாஸ்டர்’ (Master) படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இந்தப் படம் போக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’, 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் (Muttiah Muralitharan) வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ALSO READ | விரைவில் வெளியாகிறது தளபதி விஜய்யின் மாஸ்டர் டீஸர்
இந்த படத்தை தயாரிக்கும் மூவி ட்ரெயின் எம்பி என்ற நிறுவனம் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தின் வேலைகள் முடிந்து இறுதிக்கட்டப்பணிகள் நடந்துவருகின்றன. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார் என்பதை அந்தப் படத்தை தயாரிக்கும் டிஏஆர் மோஷன் பிச்சர்ஸ் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இப்படத்திற்கு ‘800’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
ALSO READ | விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் படத்தின் பெயர் இதுதான்…செம்ம காமெடி டைட்டில்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR