ரீ-ரிலீஸ் ஆகிறது ‘96’ திரைப்படம்! எந்த தேதியில் தெரியுமா?
96 Tamil Movie Re-release: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த 96 திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
96 Tamil Movie Re-release: காதலர் தினம் வெகு விரைவில் வரவுள்ளதை ஒட்டி, அதற்கான கொண்டாட்டங்கள் ஆங்காங்கே களைக்கட்டி வருகின்றன. இந்த நிலையில், காதல் படமான 96 திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
96 திரைப்படம்:
2018ஆம் ஆண்டு வெளியான படம், 96. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் ஹீரோ-ஹீரொயினாக நடித்திருந்தனர். படத்தை சி.பிரேம் குமார் இயக்கியிருந்தார். இது, அவரது முதல் படமாகும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த படத்தை பலர் அப்போதே மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்த்தனர்.
அழ வைக்கும் காதல் காவியம்..
தமிழகத்தில் கவனம் ஈர்க்கத்தக்க பல காதல் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில படங்களில் மகிழ்ச்சியான முடிவும், சில படங்களில் நம்மை அழ வைக்கும் முடிவும் இருக்கும். இதில், நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் படங்கள் மனதில் நிற்பதை விட, நம்மை அழ வைக்கும் படங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அப்படி, பல இளசுகளின் மனங்களை கிழித்தெறிந்த காதல் காவியம், 96. இப்படம், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இப்படம், 18 கோடியில் எடுக்கப்பட்டு உலகளவில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
கதை..
பள்ளிப்பருவத்தில் காதலிக்கும் ராம்-ஜானு, எதிர்பாராத வகையில் தங்கள் காதல் குறித்து பேசாமலேயே பிரிகின்றனர். 22 வருடங்கள் கழித்து, பள்ளி மாணவர்களின் ரீ-யூனியனில் சந்தித்துக்கொள்ளும் இவர்கள், அதன் பிறகு தங்களது காதலை அசைபோடுகின்றனர். அந்த ஒரு இரவில் நடக்கும் கதைதான் முழு படம்.
மேலும் படிக்க | வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.. என்ட்ரியாகும் மாஸ் நடிகர்.. வெற்றிமாறனின் அதிரடி
ரீ-ரிலீஸ் ஆகிறது:
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான படங்கள், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டுமன்றி, வெற்றி பெற்ற காமெடி படங்களும் ரிலீஸாகி வருகின்றன. அந்தவகையில், காதலர் தினத்தை ஒட்டி, இந்த மாத தொடக்கத்தில் பிரேமம் படம் வெளியானது. அதே போல, தற்போது 96 படமும் வெளியாக உள்ளது.
படம் ரீ-ரிலீஸாகும் தேதி..
கமலா தியேட்டரில் காதலர் தினத்தன்று, (பிப்ரவரி 14) வெளியாகிறது. அது மட்டுமன்றி, இந்த படத்திற்கான டிக்கெட்டும் ரூ.96 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
96 படத்தில் வாரிசு நடிகர்கள்..
96 படத்தில் முதல் பாதி முழுவதும் காதல் ஃப்ளேஷ் பேக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதில், விஜய் சேதுபதியின் இளம் கதாப்பாத்திரத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருப்பார். அவருடன் த்ரிஷாவின் இள வயது கதாப்பாத்திரத்தில் கெளரி கிஷனும் நடித்திருப்பர். இன்னொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் தேவதர்ஷினியின் மகள் நித்யா கடம்பியும் நடித்திருப்பர்.
மேலும் படிக்க | தலையை சுற்ற வைக்கும் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ