இந்தி திணிப்பு - எதிர்ப்பை கையில் எடுத்திருக்கும் விஜய்

இந்தி மொழி தொடர்பாக பீஸ்ட் படத்தில் விஜய் பேசியிருக்கும் வசனம் வைரலாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட். இன்று வெளியான இப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்த ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஓரளவு நன்றாக இருந்தாலும் லாஜிக்கே இல்லாமல் பல காட்சிகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் படத்தின் ஒரு காட்சியில், ‘உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா. எல்லா தடவையும் இந்தியை ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது’ என விஜய் பேசும் வசனம் தற்போது வைரலாகியுள்ளது.
ஏற்கனவே ஜெய்பீம் திரைப்படத்தில் தமிழ் மொழி தெரிந்துகொண்டே இந்தியில் பேசுபவரை பிரகாஷ் ராஜ் அறைவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுந்தன.
மேலும் படிக்க | Beast Twitter Reactions: பீஸ்ட் ட்விட்டர் விமர்சனங்கள், என்ன இப்படி ஆகிடுச்சே
அதுமட்டுமின்றி, சமீபத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியைத்தான் கருதவேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து பதிலளித்திருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ்தான் இணைப்பு மொழி என கூறியிருந்தார்.
அவரை அடுத்து இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிம்பு உள்ளிட்டோர் ட்விட்டரில் நேற்று, தமிழால் இணைவோம் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியிருந்தனர்.
தற்போது, தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் இந்தி விவகாரம் குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமின்றி வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க | இப்படி பண்ணிடீங்களே நெல்சன்! பீஸ்ட் திரைவிமர்சனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR