நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்து இருந்தது. பீஸ்ட் படத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.  கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay


பீஸ்ட் படம் வெளியான பிறகு தளபதி 66 படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது. விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக இப்படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சீனியர் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக கமிட்டாகி இருக்கிறார். இரண்டு மாதம் முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்றது. 


பின்பு தற்போது சென்னையில் பரவலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.  முன்னதாக இணையத்தில் வெளியான தகவல் போலவே, இப்படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் கேசுவலாக கோர்ட் சூட்டில் சேர் மீது அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.


 



மேலும் படிக்க | தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR