தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 21, 2022, 11:35 AM IST
  • தீபாவளி தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.
  • ஆகஸ்டில் வெளியாக இருந்து தற்போது மாற்றம்.
  • வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு.
தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்! title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் உலகளவில் நல்ல வசூலை பெற்று வெற்றி படமாக மாறியுள்ளது. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வந்தார்.  காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைத்துள்ளார் தமன். 

மேலும் படிக்க | 'புஷ்பா 2' படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்?

முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஏற்கனவே ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும், கார்த்தியின் விருமன் படமும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக இருந்தது. பொதுவாக சிவகார்த்திகேயன் தனது படங்களை தனியாக வெளியிட ஆசைப்படுவார். இதனால் சிவகார்த்திகேயனின் படம் தள்ளிப் போகுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்து எழுந்தது.

அஜித் - வினோத் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் AK61 படம் முன்னதாக தீபாவளி வெளியீட்டை திட்டமிட்டு இருந்தது, ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தீபாவளி ரேஸில் இருந்து அஜித் படம் வெளியேறியதாக தகவல்கள் வந்தது. இதனை கருத்தில் கொண்டு சுதாரித்துக்கொண்ட சிவகார்த்திகேயன் தனது பிரின்ஸ் படத்தை தீபாவளி வெளியீட்டிற்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் படமும் வெளியாக உள்ளது.  மேலும் சில படங்களும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய் படத்துக்காக பாலிவுட் வாய்ப்பை இழந்த நெல்சன் திலீப்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News