தமிழ் சினிமா ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என அழைக்கப்படும் நடிகர் விஜய். குழந்தை நட்சத்திரமாக பின்பு வாலிபனாக படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர், தற்பாேது தனது 40களில், அசால்டாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார். இவர், சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியலில் விஜய்..


நடிகர் விஜய், அரசியலில் களமிறங்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் தாறுமாறாக பரவி வருகின்றன. விஜயும் அதற்கேற்றார் போல, தனது படங்களிலும் அரசியல் வசனங்களை கொஞ்சம் தூக்கலாகவே பேசி வருகிறார். எல். விஜய் இயக்கிய ‘தலைவா’ படத்தில் இருந்து விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்ட இந்த தகவல், தற்போது வரை தொடர்ந்து வருகிறது. அதுவும், ‘சர்கார்’ படத்திற்கு பிறகு ரசிகர்கள் அந்த தகவலை உறுதியாகவே நம்பிவிட்டனர். இந்த நிலையில், அவர் கடைசியாக ஒரு படத்தில் நடித்துவிட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. 


மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: முழு வில்லியாக மாறிய அன்னம்! கூடிய பஞ்சாயத்து, அமுதா முடிவு என்ன?


2026 தேர்தல் டார்கெட்..?


நடந்து முடிந்த 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைப்பெற்றது. நடிகர் விஜய் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் சுமார் 1,600 மாணவிகள் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பங்கேற்ற மாணவர்களில் இருந்து, பெற்றோர்கள் வரை பலர் “விஜய் அரசியலுக்கு வந்து தமிழகத்தை காக்க வேண்டும்..” என்று கோரிக்கை வைத்தனர். விஜய்யும் தனது அரசியல் பிரவேசம் குறித்து ஹிண்ட் கொடுப்பது போல பேசினார். இதையடுத்து, விஜய் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. 


சினிமாவை விட்டு விலகும் விஜய்..!


விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய், நேற்று பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது செல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதில் விஜய் என்ன பேசினார் என்பதை, மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறினர். அதில், விஜய் அரசியலில் இறங்கி விட்டால் சினிமாவில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகிவிடுவேன் எனக்கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், விஜய் அரசியலில் இறங்க உள்ளதும் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 


கடைசி படம்..


விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், தன் பங்கு படப்பிடிப்பினை விஜய் சமீபத்தில் நடித்து கொடுத்திருந்தார். இதையடுத்து, இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். தளபதியின் 68ஆவது படமான இதற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் நடிகர்களுக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது. விஜய்க்கு அவரது 68ஆவது படமே கடைசி படமாக இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் அடுத்த ஒரு பிரபல டைரக்டருடன் இரண்டாவது முறை கைக்கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஷங்கருடன் கூட்டணி..


நடிகர் விஜய்-இயக்குநர் ஷங்கர் முதன்முதலில் ‘நண்பன்’ படத்தில் கைக்கோர்த்திருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் கைக்கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம், விஜய்யின் 69 படமாகவோ அல்லது 70 படமாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ