உங்களின் இந்த பேவரெட் தொடர்கள் முடிவுக்கு வருகிறதா? உண்மை என்ன?
டிஆர்பி இல் கீழே விழுந்த சீரியல் தொடர்கள் நிறுத்த விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும், அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இருப்பினும் டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக சன், ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் விஜய் டிவியில் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்கள் குவித்து வருகின்றன. இதில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளன.வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை காண்பதில் ரசிகர்களின் ஆர்வம் இந்த சேனல்களை மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுக்க வைக்கின்றன. இதன்மூலம் டிஆர்பியும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | 9 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய்-அஜித் படங்கள்?
அதன்படி கடந்த வாரம் வெளியான டி.ஆர்.பி ரேட்டிங் தகவலின் படி, முதல் நான்கு இடங்களை சன் டிவி தொடர்கள் பிடித்திருந்தது. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடர் 5வது இடத்திலும், பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே 2, மற்றும் ஜீ தமிழ் தொடர்கள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது, டி.ஆர்.பி ரேட்டிங்கில் சுத்தமாக முன்னேற்றம் இல்லாத காற்றுக்கென்ன வேலி, மௌனராகம் 2, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களை நிறுத்த விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க | மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்
மேலும் படிக்க | கீர்த்தி டூ அதிதி... நாயகிகளாக அவதாரமெடுத்த பிரபலமான வாரிசு நடிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ