மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்

தன்னுடைய அரை நிர்வாண புகைப்படம் லீக் செய்யப்பட்ட ஒன்று என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2022, 03:01 PM IST
  • என்னுடைய அரைநிர்வாண புகைப்படம் வெளியிடப்படவில்லை
  • என் மனைவி ஜூவாலா கட்டா லீக் செய்துவிட்டார்
  • கட்ட குஸ்தி புரோமோஷனில் விஷ்ணு விஷால் ஓபன் டாக்
மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்!  பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் ‘கட்ட குஸ்தி’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, தன்னுடைய அரை நிர்வாண புகைப்படம் வெளியானதன் பின்னணியை கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால். 

மேலும் படிக்க | பேச்சிலர் பார்ட்டிக்காக கிரீஸ் பறந்த ஹன்சிகா! தோழிகளுடன் கும்மாளம் - வீடியோ

பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங், தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த சமயத்தில் விஷ்ணு விஷாலின் அரைநிர்வாண புகைப்படமும் வெளியானது. இதுகுறித்து கட்ட குஸ்தி திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, அந்த புகைப்படத்தை தான் வெளியிடவில்லை, லீக் செய்யப்பட்டு விட்டது என கூறியுள்ளார். மேலும், தன்னுடைய அந்த அரை நிர்வாண புகைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

"அந்த போட்டோவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது. இருப்பினும் அதனை வெளியிடாமல் வைத்திருந்தேன். ரன்வீர் சிங்கின் போட்டோஷூட் வெளியானபோது நீயும் உன்னுடைய போட்டோவை போட்டா என்ன? என எனது மனைவி ஜுவாலா கட்டா தான் அதை லீக் செய்துவிட்டார்" என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | நடிகையுடன் வெளிநாட்டில் டேட்டிங்! செம ஹேப்பியில் நாக சைதன்யா - அப்செட்டில் சமந்தா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News