ராஜா ராணி 2 சீரியல் விரைவில் நிறுத்தம்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் `ராஜா ராணி-2` சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து சீரியலை விட்டு வெளியேறி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'ராஜா ராணி-2' சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த சீரியல் க்ரிஞ்சாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிந்தி ரீமேக் சீரியலான என் கணவன் என் தோழன் சீரியலை அடிப்படியாக வைத்து தான் 'ராஜா ராணி-2' சீரியல் ஓடிக்கொண்டு இருக்கிறது. போலீசாக துடிக்கும் மனைவியின் கனவை பல எதிர்ப்புகளையும் மீறி கணவன் நிறைவேத்துவது தான் இந்த சீரியலின் மையக்கரு. இதில் கதாநாயகனாக சித்து மற்றும் ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வந்தனர். நிறைமாத கர்ப்பதிலும் சீரியலில் நடித்து வந்த ஆல்யா டெலிவரி காரணமாக சீரியலை விட்டு விலகினார்.
அதனைத்தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் ரியா ஒப்பந்தமானார், இப்படியே சீரியல் ஓடிக்கொண்டிருக்க திடீரென்று இதில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனா சீரியலை விட்டு விலகும் செய்தி வெளியானது. 'ராஜா ராணி-2' சீரியலை விட்டு தான் விலகுவதை அர்ச்சனாவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுகை ஒன்றை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். அர்ச்சனா கதாபாத்திரத்திற்கு அடுத்து யார் வரப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மேலும் இந்த சீரியலில் இருந்து மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் விலகுவதாக தெரிய வந்துள்ளது. இதில் கதாநாயகனாக நடிக்கும் சித்து தான் தற்போது விலக போகிறாராம்.
மேலும் படிக்க | 9 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய்-அஜித் படங்கள்?
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'திருமணம்' எனும் சீரியலில் நடித்து பிரபலமானவர் சித்து. இவருக்கு படத்தில் நடிப்பது தான் ஆசை, பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இவ்வளவு எதிர்பார்த்த விஷயம் தனக்கு கிடைத்திருப்பதால் சித்து சீரியலை விட்டு விலகுகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த சீரியலில் வசனம் எழுதி வந்த பாரதி என்பவர் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு வசனம் எழுத தொடங்கிவிட்டாராம். இப்படி ஒவ்வொருவராக சீரியலை விட்டு விலகுவதால் ஒருவேளை 'ராஜா ராணி-2' சீரியல் முடியப்போகிறதோ என்கிற பேச்சு எழுந்து வருகிறது.
மேலும் படிக்க | கீர்த்தி டூ அதிதி... நாயகிகளாக அவதாரமெடுத்த பிரபலமான வாரிசு நடிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ