வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி!
வாரிசு பட ரிலீஸூக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து குட்டி ஸ்டோரி மூலம் வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய் பேசுவார் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் வாரிசு படத்தின் உரிமையை கைப்பற்றுவதில் இருதரப்புக்கும் பெரும் இழுபறி ஏற்பட்டது.
மேலும் படிக்க | வாரிசு ஆடியோ ரிலீஸில் அரசியல் பேசுவாரா விஜய்? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு!
இதில் விஜய் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினும் தனக்கும் விஜய்க்கும் மனவருத்தம் இருந்ததாகவும், அது பின்னர் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறிய சில வாரங்களிலேயே வாரிசு படத்துக்கு சிக்கல் உருவானது. வாரிசுக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் துணிவு படத்தின் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியிருப்பதால், வாரிசு படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் உருவானது. வாரிசு படத்தின் சில ஏரியாக்களை ரெட் ஜெயண்ட் மூவீஸூக்கு கொடுத்தால் மட்டுமே துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் கிடைக்கும் என்ற சூழலுக்கும், வாரிசு படக்குழு தள்ளப்பட்டது.
சினிமா வட்டாரத்தில் பெரும் புகைச்சலையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த விவகாரம் அண்மையில் முடிவுக்கு வந்தது. வாரிசு படத்தின் சில ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியது. இருந்தாலும், வாரிசுக்கு தியேட்டர் கிடைப்பதில் உருவான சிக்கலால் வருத்தத்தில் இருக்கும் விஜய், வாரிசு ஆடியோ ரிலீஸ் மேடையில் ரியாக்ட் செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது. அதுவும் தன்னுடைய டிரேட் மார்க் ஸ்டைலான குட்டி ஸ்டோரி மூலம் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவருடைய பேச்சை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ