விஜய்க்கு வொர்க்கவுட்டாகுமா ’V’ சென்டிமெண்ட்?
வாரிசு திரைப்படத்தில் முதன்முறையாக தன்னுடைய சொந்த பெயரிலேயே நடிக்க இருக்கிறாராம் விஜய்.
நடிகர் விஜய்யின் ’தளபதி 66’ திரைப்படத்துக்கு ‘வாரிசு’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர், திரைக்கதையாசிரியர் மற்றும் இசையமைப்பாளரான வம்சி பைடிபல்லியின் இயக்கத்தில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தில் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் பிரபு, யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். குடும்பம், சென்டிமென்ட் கதைக்களத்தை வைத்து உருவாகும் படம் ‘வாரிசு’ என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!
படத்தின் நடிகர் விஜய், இயக்குநர் வம்சி பைடிபல்லி, படத்தின் டைட்டில் ‘வாரிசு’ என அனைவரின் முதல் பெயரும் ’V’ எழுத்தில் தொடங்கும் நிலையில், விஜய்யின் கதாப்பாத்திரமும் அதே எழுத்தில் தொடங்கும் வகையில் உருவாக்கப்படிருக்கிறதாம். படத்தின் விஜயின் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘விஜய் ராஜேந்திரன்’ என வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர் மென்பொறியாளராக நடிக்கிறாராம். இதுவரை வந்த படங்களில் இப்படியொரு கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்தது இல்லை. முதன்முறையாக மென்பொறியாளராக நடிப்பதால், படத்தில் நிறைய டிவிஸ்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வாரிசு படத்தின் 4வது கட்டப் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், மொத்த படக்குழுவும் ஹைதராபாத்தில் இருக்கின்றனர். அந்த ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்தவுடன், 5வது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். முதன்முறையாக விஜய்யின் வாரிசு திரைப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மகேஷ் பாபு கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
மேலும் படிக்க | 'தளபதி 67' படத்தில் இணையும் பஹத் பாசில்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ