விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் தெலுங்கில் 'வாரசுடு' என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.  வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு படத்தை ஜனவரி 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.  ஆனால் 'வாரிசு' படத்தோடு மோதவிருந்த துணிவு படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 11ம் தேதி வெளியிட முடிவு செய்தது.  இதனால் 'வாரிசு' படக்குழுவும் 'துணிவு' படம் வெளியாகும் அதே தேதியில், ஜனவரி 11ம் தேதியே படத்தை வெளியிடுகிறது.  இந்நிலையில் 'வாரிசு' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'வாரசுடு' படத்தை தெலுங்கில் ஜனவரி 11ம் தேதியன்று வெளியிடாமல் ஜனவரி-14ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அஜித் - விக்னேஷ் சிவன் படம்... வில்லனாக தனி ஒருவன்?



ஏனெனில் பண்டிகை தினத்திற்கு முன்னர் வாரிசு படத்தை வெளியிட்டால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் 'வாரசுடு' படத்திற்கு போட்டியாக தெலுங்கில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களான வால்டர் வீரைய்யா மற்றும் வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.  இந்த படங்களால் வாரிசு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கருதும் தயாரிப்பாளர் தில் ராஜு படத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்வார் என்றும் படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.  



பிரபல விநியோக நிறுவனமான ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வாரிசு/வாரசுடு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் பிளேலிஸ்டில் டாப் இடத்தை பிடித்துள்ளது, அதுமட்டுமல்லாது சில தினங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  இதில் விஜய்யின் ஹேண்ட்ஸம் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.  மேலும் வெளிநாடுகளில் வாரிசு படத்தின் பிரிமியர் காட்சிகள் நடைபெறவில்லை.  தமிழகத்தில் வாரிசு படம் காலை 4 மணிக்கும், துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும் நடிகை, தலைக்கீழாக நின்று யோகாசனம்: வீடியோ வைரல்