கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 7 போட்டி, விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக தேர்வான விஜய் வர்மா மிட்வீக் எவிக்ஷன் முறையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 7:


தமிழகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு தலைப்பு, பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil). இந்த நிகழ்ச்சியின் எந்த சீசன் ஆரம்பித்தாலும், அதை சர்ச்சைகளும் தொடர ஆரம்பித்து விடும். இந்தியில் 2007 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனுடன் சேர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. 


பிக்பாஸ் சீசன் 7-ல், சில சின்னத்திரை நட்சத்திரங்களும், திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களாக வருபவர்களும், சில டிஜிட்டல் முகங்களும் போட்டியாளர்களாக களம் இறங்கினர் (Bigg Boss 7 Tamil Contestants). இதில், கவனம் ஈர்த்தவர்களாகவும், பலமான போட்டியாளர்களாகவும் கருதப்பட்டவர்கள் பலர் சில வாரங்களிலேயே போட்டியை விட்டு வெளியேறினர். அந்த வகையில், இரண்டாவது வாரத்திற்கு பிறகு எவிக்ட் செய்யப்பட்டார். 


விஜய் வர்மா எவிக்ஷன்…


திரையுலகில் துணை நடன கலைஞராக இருந்தவர் விஜய் வர்மா. இவர், உடற்பயிற்சி கூடத்தையும் நடத்தி வருகிறார். இவர், பிக்பாஸ் போட்டியின் கடைசி பாேட்டியாளராக நுழைந்து, முதல் வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றாகவே கேப்டன்ஸியையும் செய்தார். இதையடுத்து, ஒரு டாஸ்கின் பாேது விஜய்யால் 2 போட்டியாளர்கள் அடிப்பட்டனர். இதையடுத்து இவருக்கு மக்கள் பெரிதாக வாக்களிக்கவில்லை. இதையடுத்து இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். 


இதையடுத்து, பிக்பாஸ் போட்டியின் இரண்டாவது வைல்டு கார்டு மூலம் விஜய் வர்மா போட்டிக்குள் நுழைந்தார். இந்த இல்லத்திற்குள் நுழைந்த போது, அனைத்து போட்டியாளர்களின் குறையையும் கூறி, அதையெல்லாம் உடைக்கப்பாேவதாக கூறிய இவர், தனது வேலைக்கு ஏற்றார் போல தீயாக விளையாட வில்லை என்று கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸில் இன்று திடீர் ட்விஸ்ட்... வெளியேறிய முக்கிய போட்டியாளர்... இவ்வளவு சம்பளமா!


மிட் வீக் எவிக்ஷன்..


முன்னர் இல்லாதது போல, பிக்பாஸ் போட்டியில் இந்த முறை பல விதிமுறைகள் மாற்றப்பட்டன. ஒன்றாக இருந்த பிக்பாஸ் இல்லமே இந்த சீசனில் இரண்டு இல்லங்களாக பிரிக்கப்பட்டன. இரண்டு எவிக்ஷன், மிட் வீக் எவிக்ஷன் என புதுப்புது விஷயங்கள் இணைக்கப்பட்டிருந்தன. முதல் போட்டியாளராக பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன அனன்னயா ராவ், முதல் போட்டியாளராக மிட் வீக் எவிக்ஷனில் இருந்தும் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் போட்டியின் இறுதி வாரம் நடைப்பெற்று வருகிறது. இதில், 6 ஃபனலிஸ்டுகளுக்குள் ஒருவராக இருந்த விஜய் வர்மா, நேற்று மிட் வீக் எவிக்ஷன் (Viay Varma Eviction-Midweek Eviction) மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளார். 


மொத்த சம்பளம்..


பிக்பாஸ் போட்டியில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை பேமண்ட் ஆக கொடுக்கப்படுகிறது. அப்படி, விஜய் வர்மாவிற்கும் (Vijay Varma Salary In Bigg Boss 7 Tamil) ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதன் முதலில் 21 நாட்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்த போது அவருக்கு மொத்தமாக ரூ.3.15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். எவிட்க் ஆன பிறகு, இவர் 56வது நாளில் இந்த இல்லத்திற்குள் மீண்டும் நுழைந்தார். சுமார் 45 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்துள்ளார். இவருக்கு மொத்தமாக ரூ.6.75 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | BB Tamil Winners: பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ