மாஸ் காட்டும் விஜயின் மாஸ்டர் Promo: #MasterPromo3-யில் கலக்கும் வாத்தி விஜய்!!
லோகேஷ் கனகராஜின் அதிரடி இயக்கத்தில் தளபதி விஜயின் அட்டகாச நடிப்பில் மாஸ்டர் படு மாசாக உருவாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் சமீப காலங்களில் மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படமாகும். மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் இரண்டாவது ப்ரமோ (#MasterPromo2) வெளியானது.
தற்போது இன்று மாஸ்டரின் (Master) மூன்றாவது ப்ரமோ (#MasterPromo3) வெளியாகியுள்ளது.
ALSO READ: Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....
திரைப்பட நிறுவனம் வெளியிட்டுள்ள மூன்றாவது ப்ரமோவில் மாஸ் காட்டுகிறார் மாஸ்டர். கல்லூரி வளாகத்திலும் மெட்ரோ ரயிலிலும் அவர் சண்டையிடும் காட்சிகள் இந்த ப்ரமோவில் இடம் பெற்றுள்ளன.
வைரல் (Viral) ஆகிக்கொண்டிருக்கும் இந்த ப்ரமோவும் ரசிகர்களின் ஆர்வத்தையும் படத்திற்கான காத்திருப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
விஜய் (Vijay) சிகர்களின் மிகப் பெரிய பொங்கல் பரிசாக மாஸ்டர் படம் வரவுள்ளது என்பதில் சந்தெகமில்லை. லோகேஷ் கனகராஜின் அதிரடி இயக்கத்தில் தளபதி விஜயின் அட்டகாச நடிப்பில் மாஸ்டர் படு மாசாக உருவாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் விஜயுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) இணைந்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். இவர்களைத் தவிர படத்தில்,
மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், கௌரி ஜி கிஷன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களுக்காக, படம் வெளியாவதற்கு முன்னர் பல ப்ரமோக்களை வெளியிடப்போவதாக படக்குழு கூறியிருந்தது. இரண்டாவது ப்ரமோவில் விஜயின் டயலாக்குகளை கேட்க முடிந்தது. மூன்றாவது ப்ரமோவில் ஒரு பாடல் காட்சியின் சில காட்சிகள் உள்ளன.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்சும் இணைந்து இயக்கியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ள இப்படம் விஜயின் முக்கியமான ஆக்ஷன் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று பேசப்படுகின்றது.
ALSO READ: தளபதி விஜய்யின் மாஸ்டர் டயலாக் promo வெளியானது... master ஆகும் dialogue
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR