J.B.J பிலிம்ஸ் தயாரித்துள்ள ’ஒபாமா’ திரைப்படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன்,  ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா, கயல் தேவராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சிறப்புத்தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் இணைந்தது எப்படி? என்பது குறித்த சுவாரஸ்ய பின்னணியை, ஒபாமா படத்தின் இயக்குநர் நானி பாலா இப்போது தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Spiderman No Way Home முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! அதிரடி கலெக்‌ஷன்


அதாவது, விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் முன்பு ஒரு பிரபலமான நடிகர் நடிக்க இருந்தாராம். சூட்டிங் தொடங்கியவுடன் அவர் நடிக்க மறுத்ததால், படத்தின் இயக்குநர் நானி பாலா கடும் அப்செட்டில் இருந்துள்ளார். அப்போது, படத்தில் நடித்த மூத்த கலைஞரான ஜனகராஜ், தான் ஒரு முயற்சி எடுப்பதாக இயக்குநர் நானியிடம் தெரிவித்துவிட்டு, 96 படத்தின் இயக்குநர் பிரேம் மூலம் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார். இதனைக் கேட்ட விஜய் சேதுபதி, ‘அண்ணனுக்காக நடிக்கலாம்’ என சொல்லியுள்ளார். 


ALSO READ | Movie Trailer: ஷியாம் சிங்கா ராய்! தமிழ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா


இதனை உடனே ஜனகராஜ் இயக்குநர் நானி பாலாவிடம் கூற, அவரால் இதனை நம்பவே முடியவில்லையாம். விஜய் சேதுபதியைக் கேட்டால் நடிப்பார் என உங்களுக்கு எப்படி தோன்றியது? என ஜனகராஜிடம் கேட்டபோது, அவருடன் பழகியதில் தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார். இது சீனியர் ஒருவருக்கான மரியாதை, விஜய் சேதுபதி தொழிலுக்கு காட்டும் நன்றி தான் காரணம் எனத் தெரிவித்துள்ள நானிபாலா, படத்தின் கதையை 96 பட இயக்குநர் வழியாக விஜய்சேதுபதிக்கு அனுப்பியுள்ளார். அவரும் கதையைப் படித்துவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், இருவரும் சிறிய கலந்துரையாடலுக்குப் பிறகு விஜய் சேதுபதி தனக்கான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் பணியைக் கண்டு வியந்துபோன நானிபாலா, மக்கள் செல்வன் படத்திற்கு ஏற்றவர் அவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், திரையில் அதன் ஆட்டத்தைக் காணலாம் என்றும் நானிபாலா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR