Spiderman No Way Home முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! அதிரடி கலெக்‌ஷன்

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஹாலிவுட் திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2021, 01:03 PM IST
  • ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஹாலிவுட் திரைப்படம்
  • முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!
  • அதிரடி கலெக்‌ஷன்
Spiderman No Way Home முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! அதிரடி கலெக்‌ஷன் title=

புதுடெல்லி: மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் Spiderman No Way Home. இந்த திரைப்படத்துக்கான ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமான வரவேற்பும் கிடைத்தது.  

இந்தியாவிலும் மார்வெல் (Marvel Cinematic Universe) தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் மோகம் இன்னும் குறையவில்லை. வெளியான உடனேயே, இந்த வருடம் எந்தவொரு பெரிய திரைப்படமும் செய்ய முடியாத சாதனையை செய்துள்ள இந்த திரைப்படம், முதல் நாளிலேயே அமோக வசூல் செய்துள்ளது.

முதல் நாள் வருமானம்

'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' பாக்ஸ் ஆபிஸில் அனைத்து மொழி படங்களின் சாதனைகளை முதல் நாளிலேயே முறியடித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள புள்ளி விவரங்களின்படி இப்படம் முதல் நாளில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read | ஹீரோ பில்டப்பில் கதையை கோட்டை விட்ட புஷ்பா! படம் எப்படி இருக்கு?

எனவே, வெள்ளிக்கிழமையன்று வெளியாகவிருக்கும் திரைப்படங்களுக்கு ஸ்பைடன் மேன், நோ வே என்று சொல்லிவிட்டாரோ என்று இந்திய திரையுலகில் கவலைகள் அதிகரித்துள்ளன. 

குறிப்பாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திற்கு சிக்கல் அதிகரிக்கலாம். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் வெளியான அடுத்த நாளே, அதாவது இன்று (டிசம்பர் 17) வெளியாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பார்வையாளர்கள் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு செல்வார்களா அல்லது அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'வை (Movie Pushpa) பார்க்கிறார்களா என்பது நாளை தான் தெளிவாக சொல்ல முடியும். தற்போது 'ஸ்பைடர்மேன்' திரைப்படம், வியாபார சந்தையை புரட்டிப் போட்டுள்ளது என்றே கூறலாம்.

மார்வெலின் படங்கள் எப்போதும் பிரமிக்க வைக்கும்

இந்திய ரசிகர்களிடையே ஹாலிவுட் படங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மார்வெல் படங்களுக்கு ரசிகர்களிடம் வித்தியாசமான வரவேற்பு காணப்படுகிறது. 

2019ஆம் ஆண்டு வெளியான மார்வெல் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'  (Avengers Endgame) முதல் நாளிலேயே ரூ.53.10 கோடி வியாபாரம் செய்தது. இதற்குப் பிறகு 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் ஒரே நாளில் ரூ.31.30 கோடி வசூல் செய்தது. அதேபோல, 2019ல் வந்த 'ஹாப்ஸ் அண்ட் ஷா'  (Hobbs and Shaw) படம் முதல் நாளில் ரூ.13.15 கோடி வியாபாரம் செய்தது.

Also Read | ஷியாம் சிங்கா ராய்! தமிழ் திரைப்பட டிரெய்லர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News