நேரடியாக தியேட்டரில் வெளியாக போகும் `கடைசி விவாசாயி`!
விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த கடைசி விவசாயி படம் திரை அரங்கில் வெளியாகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியே வராமல் இருந்த படங்கள் வரிசையாக வெளிவரத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மூன்று படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகின. இதனால் விஜய் சேதுபதியை அண்ணே வாசிகள் மீம்களின் மூலம் கலாய்த்து தள்ளினார். ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் படம் "கடைசி விவசாயி". இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் கதாநாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்திருக்கிறார், அவருடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு உடன் பயணிக்கின்றனர். வித்தியாசமான அதே சமயம் சென்டிமெண்டான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது . படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து வெளியீட்டிற்காக காத்து கொண்டிருந்தது .அதனையடுத்து கொரோனா அச்சுறுத்தலால் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது பல படங்கள் OTT தளங்களில் வெளியாகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் 'கடைசி விவசாயி' படமும் OTT-யில் வெளியாகும் என்றும் , அதனை சோனி லைவ் இயங்குதளம் விநியோக உரிமையை வாங்கி வெளியிட இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் நேரடியாக டிசம்பர் மாதம் தியேட்டரில் வெளியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ALSO READ 20 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான 10 திரைப்படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR