லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும், மத்திய, மாநில அரசுகளை கமல் விமர்சித்திருக்கிறார் என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியது.



சிங்கிள் பாடலாலும், லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


இதற்கிடையே, படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இந்நிலையில், விக்ரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ”காடுனு ஒன்னு இருந்தா” என்று கமல் பேசும் வசனத்தோடு ஆரம்பிக்கும் ட்ரெய்லர் போகப்போக ஆக்‌ஷன் காட்சிகளில் நிரம்பியிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த கமல் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


 



முன்னதாக விழா ஆரம்பிக்கையில் கமல் ஹாசனுக்கு இளையராஜா வீடியோ வழி வாழ்த்து கூறினார்.


மேலும் படிக்க | விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள்?... அனிருத் வெளியிட்ட லிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR