1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம். 22 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 41 படங்களில் இதுவரை நடித்துள்ளார்.  கமல்ஹாசனிற்கு அடுத்து நடிப்பிற்கு பேர் போனவர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் இவர் போடும் உழைப்பு எண்ணிலடங்காதது. ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் பல சாதனைகளை படைத்துள்ளார். இதனால் பல முறை இவர் தீவிர சிகிச்சையிலும் இருந்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஸ்டைல் ஹா, கெத்தா ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை பாவனா!


இந்நிலையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்திய நேர்காணலில் விக்ரமைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.  விக்ரமுக்கு நடிக்க தெரியாது என்றும் கையை, காலை ஆட்டினால் மட்டும் நடிகன் ஆகிவிட முடியாது என்றும் சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  விக்ரமை வைத்து தான் இயக்கிய படத்தில் அவர் நடிப்பதற்கு மிகவும் சிரமப் பட்டார் என்றும் கூறியுள்ளார்.  ராஜகுமாரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இணையத்தில் விக்ரமின் ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர்.


 



நடிப்பிற்காக விக்ரம் இதுவரை வாங்கியுள்ள விருதுகள்:


பிதாமகன் படத்திற்காக தென்னிந்தியாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஹைதராபாத்தை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியது. 


ராவணன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை FEFKA நிறுவனம் வழங்கியது. 


இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் காசி படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியது.


பிலிம்பேர் அவார்டில் 7 முறை சிறந்த நடிகருக்கான விருதையும், நான்கு முறை நாமினேட்டும் ஆகியுள்ளார். 


பீப்பிள்ஸ் யுனிவர்சிட்டி ஆஃப் மிலன் விக்ரமிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


ஜெமினி படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை 2003ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் தமிழ் ஃபிலிம் அவார்ட்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. 


ஜெயா டிவி சார்பாக தெய்வ திருமகள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 


எடிசன் அவார்டு தாண்டவம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், ஐ படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதில் நாமினேட்டும் ஆகியுள்ளார். 


பிதாமகன் படத்திற்காக தேசிய விருது வென்றுள்ளார் விக்ரம். 


தென்னிந்திய தேசிய விருதுகளில் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். 


தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட்டில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். 


விஜய் அவார்ட்ஸில் மூன்று முறை சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். 


தெய்வ திருமகள் படத்திற்காக விகடன் நிறுவனத்திடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.


மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களை பங்கமாய் கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR