விக்ரம் பிரபு-வின் `பக்கா` திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
`பக்கா` திரைப்படத்தின் ட்ரைலர்-னை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
"பக்கா" திரைப்படத்தின் ட்ரைலர்-னை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
நெருப்புடா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு பக்கா மற்றும் துப்பாக்கி முனை ஆகிய 2 படங்கள் நடிக்கின்றார். இதில் பக்கா திரைப்டத்தின் ட்ரைலர்-னை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படதினை எஸ்.எஸ்.சூர்யா என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குநர் பேரரசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல் ராணி, பிந்து மாதவி ஆகியோர் நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய, டி.சிவகுமார் தயாரிக்கிறார். படத்தின் படப்படிப்புகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.