வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோவுடன் நடிகை ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். ஸ்ரேயாவும், டுவைன் பிராவோவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாக பட உலகில் தகவல் பரவி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோவுடன் ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு அவர்கள் ஜோடியாக வந்தார்கள். அங்கு அருகருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்கள். நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள். அப்போது சிலர் செல்போனில் படம்பிடித்தனர். 


தற்போது இருவரும் ஜோடியாக ஓட்டலுக்கு சென்று வந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றன. டுவைன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கலாசார பண்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று பேட்டிகளிலும் அடிக்கடி சொல்லி வந்தார்.


தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜி படத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. தமிழ் முன்னணி ஹீரோக்கள் விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். 


தற்போது வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தால் இருவருக்கும் இடையே இருப்பது காதலா? என்ற குழப்பம் எழுந்துள்ளது