தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை சாய்பல்லவி. இயல்பான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும், துள்ளும் அழகாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு தனுஷின் மாரி -2, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு, சூர்யாவின் நடிப்பிலான என்.ஜி.கே என பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் சாய் பல்லவி.



தற்போதுதிரையுலகில் கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் சாய் பல்லவி, 11 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தியும், அந்தத் திரைப்படத்தின் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.


2008-ல் ஜெயம் ரவி, கங்கனா ரனாவத் நடித்து வெளியான தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகி கங்கனா ரனாவத்துடன் சாய் பல்லவி தோன்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Also Read | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்


மாபெரும் வெற்றிப் படமான பிரேமம், மலையாளத் திரைப்படம். அதில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் சாய் பல்லவி. நடிப்பு அவருக்கு பிடித்தமான தொழிலாக இருந்தாலும், தனது மருத்துவ படிப்பை அவர் எக்காரணத்திற்காகவும் விடத் தயாராக இல்லை. எனவே, விடுமுறைகளில் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பார் சாய் பல்லவி.


2016 ஆம் ஆண்டில் வெளியான துல்கர் சல்மானுடன் இணைந்து கலி என்ற திரைப்படத்தில் நடித்தார். வருண் தேஜசுடன் இணைந்து ஃபிடா என்ற காதல் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.


இந்த திரைப்படத்தில் பானுமதி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் சாய் பல்லவி. எனவே, பானுமதி என்ற பெயரிலேயே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது தெலுங்கு திரைப்படம் ஃபிடா.  


Also Read | Mirchi FM: RJவாக புதிய அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் அர்ச்சனா


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR