நடிகர் கமலஹாசன் தொகுத்தளித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் தொலைகாட்சி தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் தற்போது மிர்ச்சி எப்எம்-ல் ஆர்ஜேவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
2000-ம் ஆண்டு பிரபல தனியார் தொலைகாட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். அதைத் தொடர்ந்து ஜீ தமிழ் உட்பட பல தமிழ் சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி புகழ் பெற்றவர் அர்ச்சனா.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அர்ச்சனா, ‘அன்பு தான் ஒருவரின் அடையாளம்’ எனதொடர்ந்து அழுத்தமாக சொல்லி தனக்கென ஒரு சிறப்பிடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அர்ச்சனா வராவிட்டாலும் கூட, அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. இதுவரை விஜேவாக இருந்த அர்ச்சனா தற்போது ஆர்ஜேவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
Also Read | Tamil Bigg Boss 5: தமிழ் பிக்பாஸ் 5 எப்போது, கசிந்தது முக்கிய தகவல்
மிர்ச்சி எப்எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ள அர்ச்சனா, ‘ஹாய்! சென்னை வித் அச்சுமா – அட்டகாசம் அன்லிமிடெட்’ என்ற நிகழ்ச்சியை வழங்குகிறார். காலை 7 மணி முதல் 12 மணி வரை வாரத்தின் 6 நாட்கள் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அர்ச்சனா.
இந்த செய்தியை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “புதிய தொடக்கம் இது. ஆ.ஜேவாக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளேன். ‘ஹாய்! சென்னை வித் அச்சுமா – அட்டகாசம் அன்லிமிடெட்’ உங்கள் அன்பைக் கொடுங்கள்” என்று அர்ச்சனா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு மிர்ச்சியின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த அஸ்வினி, அர்ச்சனாவை வரவேற்று பதிவிட்டு இருக்கிறார். புதிய அவதாரம் எடுக்கும் அர்ச்சனா ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைகிறார்.
Also Read | மீம்ஸ் மன்னன் செல்லம் சார் மூலம் தடுப்பூசி பிரச்சாரம் செய்யும் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR